தென் தமிழகத்தில் மித மழை பெய்ய வாய்ப்பு

மழை,  தமிழகம், புவியரசன் ,மீனவர்கள் ,சென்னை வானிலை மையம் , தமிழக வானிலை, சென்னை வானிலை, TN,Tamilnadu,rain,
Rain, Tamil Nadu, Tamil Nadu, Chennai Weather Center, Fishermen, Tamil Nadu Weather, Chennai Weather,தமிழ்நாடு,
சென்னை: சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தாய்லாந்து வளைகுடா அதனை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி , மத்தியவங்க கடலில் நிலவி வருகிறது. இது 3 நாட்களில் அந்தமான் பகுதியில் மேற்கு, வட மேற்காக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் 10 , 11, 12, 13 ம் தேதிகளில் மீனவர்கள் அந்தமான், ஒட்டிய கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை அருகே நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னைக்கு மழை வாய்ப்பு இல்லை. சமீபத்திய பருவமழை இயல்பை விட குறைவு தான். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சீர்காழியில் 7 செ.மீ. மழை, நன்னிலம் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments