நாமக்கல் மாவட்டம் அத்தனூரை சேர்ந்த அங்காயி என்பவர் பன்றிக்காய்ச்சல் காரணமாக சேலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அங்காயி உயிரிழந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவேடகத்தை சேர்ந்த லட்சுமி. திருமங்கலத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சூலூரில் புஷ்பா என்ற பெண்ணும், பீளமேட்டில் காயத்ரி என்ற பெண்ணும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கீழ ஓடைத்தெருவை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
Comments