
நிர்மலா தேவி சமீப காலத்தில் இப்படியான குற்றச்செயல்களில் சிக்கி மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதல் நபர் நிர்மலா தேவி. அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியையான இவர், மாணவிகளை உயர் அதிகாரிகளிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தி அவர்களுக்கு ஆசை காட்டி உள்ளார் என்ற தகவல் அவரது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானதன் மூலம் அம்பலமானது. தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இதேபோலத்தான் கோவை விடுதி வார்டன் புனிதாவும், அங்கு தங்கியிருந்தவர்களை பாலியல் உறவுக்கு தூண்டியுள்ளாரா். கல்லூரி மாணவிகளை அனுப்பும் பெற்றோர் ஒவ்வொருவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்ள இதுபோன்ற சம்பவங்கள், காரணமாகின.
அறநிலையத்துறை அதிகாரி கவிதா இதன் பிறகு சமீபத்தில் சிக்கி உள்ள மற்றொரு பெண் பிரபலம் கவிதா. இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் பதவியில் இருந்த இவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்தபடி இருக்கும் இவர், சிலை மோசடியில் ஈடுபட்டார் என்பதை ஏற்க பொதுமக்களின் மனதே கூட தயங்குகிறது. ஆனால், உறுதியான ஆதாரம் உள்ளதாக கூறுகிறார் பொன்.மாணிக்கவேல்.
சம கால சோக வரலாறு மாணவிகளை ஆசிரியையே பாலியலுக்கு தூண்டுவது, பெண் அதிகாரி ஒருவரே சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டது சமகால தமிழக வரலாற்றில் காணக்கிடைக்காத சோக நிகழ்வுகள். அத்தோடு முடியவில்லை இந்த பட்டியல். அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு தொடர்பாக உமா என்ற பேராசிரியை இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திறமையாளர்கள் நிலை 10 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு மறு திருத்தத்திற்கு வரும் பேப்பர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் அளிப்பதே இந்த மோசடியின் பின்புலம். எத்தனையோ ஏழை எளிய மாணவர்கள் இதுபோன்ற மோசடிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நன்கு படித்து கூட பணம் கொடுப்பவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் திறமையானவர்கள் எந்த அளவுக்கு இந்த சமூகத்தில் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
எத்தனை துரோகங்கள் ஆசிரியர்கள் மற்றொரு பெற்றோர்கள். ஆனால் நிர்மலா தேவி என்ற பேராசிரியை, மாணவிகளை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். உமாவோ பணத்தை வாங்கிக் கொண்டு நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பச்சை துரோகம் செய்துள்ளார். இந்த மாபாதக செயல்களையெல்லாம் பின்னணியில் இருப்பது பெண் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பெரும் சோகம். எப்போது இந்த பெண்கள் தடம் ஆரம்பித்தனர்? இதன் பின்னணியில் உள்ள உளவியல் என்ன? உலகமயமாக்கல் பொருளாதார தேவைகள், அறம்சார்ந்த சிந்தனைகளை விழுங்கிவிட்டனவா? இவையெல்லாவற்றையும், ஆலோசிக்கப்பட வேண்டிய அவசர தேவை இப்போது எழுந்துள்ளது.
Comments