மருத்துவமனையில் கருணாநிதி; சென்னை வருகிறார் ஜனாதிபதி

திமுக, கருணாநிதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்துவமனை, திமுக தலைவர் கருணாநிதி, கருணாநிதி உடல்நலக்குறைவு ,கலைஞர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் , துணை ஜனாதிபதி வெங்கையா, ஸ்டாலின், Karunanidhi, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin,
President Ramnath Govind,Congress leader Rahul, Vice President Venkaiah,
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , நாளை மறுநாள் (ஆக.,5) சென்னை வர உள்ளார்.

நேரில் பார்த்தவர்கள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் மருத்துவமனைக்கு வந்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர். துணை ஜனாதிபதி, முதல்வர் பழனிசாமி, காங்., தலைவர் ராகுல் ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள்(ஆக.,5) சென்னை வர உள்ளார். அவர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளார்.

Comments