
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கொலிஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, தஹில் ரமணி புதிய தலைமை நீதிபதி நியமித்தும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தஹில் ரமணி தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில், பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இதே போல், உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் ஆகியோரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Comments