இது குறத்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், 'பாஸ்போர்ட் சேவா' ஆப் மூலம் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் மக்கள், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அந்த ஆப்பில் குறிப்பிடப்படும் முகவரியில் போலீசார் சரிபார்ப்பர்கள். அந்த முகவரிக்கே பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய நடைமுறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும்.
நாடு முழுதும், லோக்சபா தொகுதி ஒன்றுக்கு ஒன்று வீதம் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஹஸ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பலர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உள்ளனர். அவர்களுக்கு இந்த ஆப் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments