எதிர்ப்பு
அணைகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நிறுத்தி வைக்க வேண்டும்
இந்நிலையில், இந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி, சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார்.அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மசோதாவில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் உள்ளன. இந்த மசோதாவிற்கு தமிழக அரசு ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநிலங்களை கலந்து ஆலோசித்து ஒரு மித்த கருத்து ஏற்படுத்தி மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
Comments