செப்டிக்டேங் தோண்டப்பட்ட பள்ளத்தில் தோட்டாக்கள் உள்ள பெட்டிகள்: வீசியது யார்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருக்கும் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் வீட்டில் செப்டிக் டேங்க் கட்ட தோண்டும் போது 5 அடியில் 23 பெட்டிகளில் எல்.எம்.ஜி., ரக தோட்டாக்கள்,ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், பலவகையான தோட்டாக்கள், நாட்டு வெடிகுண்டுகள் என தோட்டாக்கள் கிடைத்தன. 

விசாரணையில், இந்த வகையான அணைத்து தோட்டாக்களும் இலங்கையில் உள்ள விடுதலை புலிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக ராமேஸ்வரத்தில் புதைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

Comments