எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை- முதல்வர் எடப்பாடி கேவியட் மனு

18 MLA Disqualification: Tamilnadu CM files caveat in SC to hear the case
டெல்லி: எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க உள்ள நிலையில், அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பை பொறுத்தே ஆட்சி மாற்றம், ஆட்சி தொடர்ச்சி எல்லாம் முடிவாகும்.
தமிழக அரசியலின் அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் இந்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பிலேயே உள்ளது.இந்த நிலையில், இந்த 18 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் மனு தாக்கல் செய்தனர். ஒரேயொரு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனடிப்படையில் 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட உள்ளது. தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க உள்ள நிலையில், அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Comments