அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், சட்டசபையில் கவர்னர் பற்றி பேச முடியாது. சட்டசபை விதி 92/7 ன் படி சட்டசபையில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி பற்றி பேச முடியாது. கவர்னர் பற்றி பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன், அதிமுக, திமுக ஆட்சிகளின் போது சட்டசபையில் கவர்னர் பற்றி பேசியது குறித்து குறிப்பட்ட ஸ்டாலின், சபாநாயகரின் அறிவுறுத்தலையும் மீறி கவர்னர் பற்றி பேசினார். சட்டசபையில் கவர்னர் பற்றி பேச அனுமதியில்லை எனவும், அதுனை தானும் விரும்பவில்லை எனவும் சபாநாயகர் தனபால் மீண்டும் தெரிவித்தார்.
இதனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Comments