
நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர்பலியாயினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேட்டுக்கடை என்ற பகுதியில் சாலையில் வேனும்,மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 6 பேர் பலியாயினர். போலீசார் நடத்திய விசாரணையில் நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வேன் , டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே மினி லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Comments