மாலை 6 மணிக்கு பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது தொடர்பாக கவர்னர் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ள குமாரசாமி, கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக மஜத மற்றும் காங்., எம்.எல்.ஏ.,க்களிடம் அவர் கையெழுத்து பெற்று வருகிறார். கவர்னர் நேரம் ஒதுக்கும்பட்சத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஆஜர்படுத்த காங்., மற்றும் மஜத திட்டமிட்டுள்ளன.
ஒருவேளை கவர்னர் நேரம் ஒதுக்கவில்லை என்றால், அதனை எதிர்த்து கவர்னர் மாளிகை முன் எம்எல்ஏ.,க்களை அழைத்துச் சென்று தர்ணா போராட்டம் நடத்தவும் காங் மற்றும் மஜத கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தால் அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் காங்., ஆலோசனை நடத்தி வருகிறது.
Comments