சட்டசபையில் இன்று மே-19 நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும் முன்னரே பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் மஜத ஆட்சி அமைக்க தங்களை அழைக்குமாறு குமாரசாமி கவர்னரை இன்று இரவு சந்தித்து கேட்டார்.
குமாரசாமி பேட்டி
கவர்னரை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் குமாரசாமி கூறுகையில்: தற்போது நீதித்துறை மூலம் வெற்றி கிடைத்துள்ளது. கவர்னர் கேட்டு கொண்டது படி வரும் திங்கட்கிழமை 12 மணிக்குள் பதவியேற்கவுள்ளேன். நாளை இது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. பதவியேற்பு விழாவில் காங்., தலைவர் ராகுல் , சோனியா மற்றும் கூட்டணி தலைவர்களான மம்தா, சந்திரசேகரராவ், மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகியோரை அழைக்கவுள்ளேன். கூட்டணி தலைவர்களுடன் பேசி மாநிலத்தில் நல்ல நிர்வாகம் நடத்த பாடுபடுவேன் என்றார்.
Comments