
இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர். இதனால் நாளை 4 மணிக்கு எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த கூடாது என்று நீதிபதிகள் அடுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். வெளிப்படையாக மட்டும் இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் நாளை எம்எல்ஏக்கள் கைகளை தூக்கி வாக்குகளை அளிக்க வேண்டும். இது எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு வாக்களிப்பதை தடுக்கும். அதேபோல் இதனால் கட்சி தாவல் தடை சட்டம் மூலம் வேறு கட்சிக்கு வாக்களிக்கும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். இது பாஜக கட்சிக்கு பின்னடைவையும், மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
Comments