குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ விசாரிக்க கூடாது என வலியுறுத்தியும் தமிழக சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை. உயர் பொறுப்பில் இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
Comments