சட்டசபை வளாகத்தில் காங்., மஜத தர்ணா

BSYNammaCM, Mukul Rohatgi, Abhishek Manu Singhvi, காங்கிரஸ், மஜத, சட்டசபை, சித்தராமையா, தர்ணாபெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்று கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவியேற்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து, , கர்நாடக முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்று கொண்டார். இதற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, இரு கட்சி எம்.எல்.ஏ.,க்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கேவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சித்தராமையா கூறுகையில், பா.ஜ., அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. பா.ஜ.,வின் செயலை மக்களிடம் எடுத்து சொல்வோம் என்றார்.

Comments