சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 23ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதியிலும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிவகங்கையில் 9 செ.மீ., குமரி மாவட்டம், குளச்சலில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Comments