கவர்னரை சந்தித்த பின் காங்., மாநில தலைவர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்ததாவது: இரண்டு கட்சிகளும் பேசி ஆட்சியமைக்க உரிமை கோருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகள் இடையே எந்த முரணும் இல்லை. ஒரே கருத்தில் உள்ளோம். மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு, காங்., நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. எங்களின் முழு ஆதரவை ம.ஜ.த.,வுக்கு அளித்து வருகிறோம். ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.,க்கள் எங்கள் வசம் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி தெரிவித்ததாவது: காங்., மேலிடம், ம.ஜ.த.,வை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது. இதனை கவர்னரிடம், கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளோம். தேவகவுடாவிடமும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். நான், பரமேஸ்வர், குலாம்நபி ஆசாத்துடன், குமாரசாமியை சந்தித்து, எங்களின் முடிவினை கவர்னரிடம் நேரில் தெரிவித்தோம் என்றார்.
சித்தராமையா தெரிவிக்கையில், காங்., மேலிடம் ம.ஜ.த.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் முறைப்படி எங்கள் ஆட்சி அமையும். இம்முறை பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்காது என்றார்.
Comments