சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் அளித்த பேட்டி: கர்நாடகாவில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்துள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும், பிரதமர் மோடி எந்த அளவுக்கு பயன்படுத்தி, ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் என்பது, நாடறிந்த உண்மை.
அதே நிலையை, கர்நாடகத்திலும் அரங்கேற்றியுள்ளார் மோடி. இது, சட்ட விரோதமானது. மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூட்டுகிற, விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்க இருந்தோம். ஆனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் தொலைபேசியில் பேசினேன். இதையடுத்து, கமல் கூட்டுகிற கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என, ஒன்பது கட்சித் தலைவர்களும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments