காங்., நிர்வாகிகளை சந்திக்க கர்நாடக கவர்னர் மறுப்பு

காங்கிரஸ், கவர்னர், மறப்புபுதுடில்லி: கர்நாடக சட்டசபை தேர்தலில் 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, அங்கு ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. இதனை, அக்கட்சியும் ஏற்று கொண்டுள்ளது. இதனால், அடுத்து யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி.பரமேஸ்வரா தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் கவர்னரை சந்திக்க சென்றனர். ஆனால், சந்திக்க கவர்னர் அனுமதி தராததால், நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.

Comments