
சுயேட்சைகள் ஆதரவு தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்த ஜேடிஎஸ்-காங்கிரஸுக்கு 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரும் ஜேடிஎஸ்- காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எடியூரப்பாவுக்கு அழைப்பு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
15 நாட்கள் அவகாசம் இதைத்தொடர்ந்து கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்தார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் , மஜத கூட்டாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிசார்ட்டுகளில் சிறை எடியூரப்பாவுக்கு தற்போது 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்கும் வகையில் வெளி மாநில ரிசார்ட்டுகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
என்ன செய்யப்போகிறார் இந்நிலையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் 104 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சியை தக்க வைக்க நாளை மாலைக்குள் எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments