வாணாசி : உ.பி., மாநிலம் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்ததில் 16 பேர் பலியாயினர்; பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண உதவி அறிவிப்பு : இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரண தொகையாக வழங்கப்படுமென முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Comments