குரங்கணிக்கு தம்பதியராக வந்து தீயில் கருகிப் போன ஈரோடு திவ்யா விவேக்

புதுமணத்தம்பதியர் மரணம் தேனி: ஈரோட்டை சேர்ந்த திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி 100 நாட்களில் குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குரங்கணி மலை பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர் பலியாகிவிட்டனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர்.

புதுமணத்தம்பதியர் மரணம் இத்தீயில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மூன்று பேரில் ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக், திவ்யா தம்பதியர். அவரது நண்பரும் தீ விபத்தில் உயிரிழந்து விட்டார்.

விவேக் திவ்யா 100வது நாள் துபாயில் வேலை செய்து வந்தவிவேக், ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்தவர். கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி 100வது நாளை கொண்டாடியுள்ளனர்.

கொழுக்குமலை பயணம் ஒரு வாரத்தில் துபாய் செல்ல இருந்த நிலையில் தம்பதிகள் இருவருமே கொழுக்குமலை பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு சென்றனர். இதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விவேக். இந்த புகைப்படத்திற்கு நண்பர்கள் பலரும் பத்திரமாக இருங்கள் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

எதிர்பாராத மரணம் விமானம் மூலம் முணாறு சென்று அங்கிருந்து மலையேற்றப் பயிற்சியில் பங்கேற்றனர். பசுமையை ரசிக்கப் போன இடத்தில் நெருப்பின் தீ நாக்குகள் சுட்டெரித்தது. செய்வதறியாது தவித்த விவேக் தனது மனைவியை பற்றிக்கொண்டு ஓடினார். கூடவே நண்பரும் பின்தொடர்ந்து ஓடியும் பயணில்லை. தீ விபத்தில் சிக்கி 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.

புதுமண தம்பதியர் பலி ஈரோட்டில் இருந்து 8 பேர் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றனர். அவர்களில் திவ்யா, விவேக், அவரது நண்பர் உயிரிழந்து விட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பசுமையை ரசிக்கப் போனவர்கள் கரிக்கட்டையாக திரும்பி வந்திருக்கிறார்களே என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி துடிக்கின்றனர்.

Comments