சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், தென் கிழக்கு பகுதியில் வலுவிழந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது. மேலும், ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் தென் இந்திய பகுதியில் சந்திக்கின்றன.
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகத்தின் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments