பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியது தெலுங்கு தேசம்

Chandrababu Naidu, BJP Alliance,Andhra Special Status, பா.ஜ. கூட்டணி, தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, சந்திரபாபு நாயுடு, நம்பிக்கை இல்லா தீர்மானம் , ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்,
Telugu Desam Party, Andhra Pradesh Special Status,  Non Confidence Resolution, YSR Congress,புதுடில்லி : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்தியில் ஆளும் பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ளார் ஆந்திரா முதல்வரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு. இதனால் தனது கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களை சமீபத்தில் அவர் ராஜினாமா செய்ய வைத்தார். இந்த ராஜினாமாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் பா.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. விலகல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பார்லி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக எந்த கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை தான் ஆதரிக்க தயாராக உள்ளதாக சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Comments