தற்பொழுது தமிழக நிலவரம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் - ரஜினி காட்டம்

திடீர் இமயமலை பயணமாக புறப்பட்ட ரஜினியிடம் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள் குறித்தும், தமிழக சட்ட ஒழுங்கு குறித்தும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, "நன்றி, வணக்கம்..." என்று ஏளனமாக சிரித்து கொண்டே விடைபெற்ற ரஜினியிடம், நேற்று தேனி வனப்பகுதியில், காட்டுத்தீயில் மரணம் அடைந்த பெண்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகை நிருபர்களிடம், "தமிழக நிலவரம் குறித்த எந்த கேள்விக்கும் தன்னால் இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. இமயமலை பயணம் முடித்து திரும்பியது அனைத்து கேள்விக்கும் பதில் தருகிறேன்..." என ரஜினி காட்டமாக கூறினார்.

ஆன்மீக அரசியல் செய்யபோவதாக அறிவிப்பு செய்த ரஜினியின் அரசியல் பிரவசம் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் எண்ணி இருந்த நிலையில், எந்த ஒரு தமிழக பிரச்சனைகள் (காவேரி உட்பட) குறித்தும் கண்டும், காணாமலும் இருக்கும் ரஜினியின் செயல்பாடு தமிழக மக்களை மற்றும் அன்றி, அவரது ஆரம்பகால ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தன்னுடன் கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை அன்றாடம் சந்தித்து வரும் கமலுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் தமிழக மக்கள், நடிகர்கள் தங்களின் வியாபார தளமாக தமிழகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அரசியல் எனும் ஆயுதம் கொண்டு மேலும் பணம் சம்பாதிக்க இவர்கள் நினைப்பதாக மக்களின் மனதில் எண்ணங்கள் தோன்ற ஆரம்பத்து இருக்கிறது.

தமிழக மக்களின் கஷ்டங்களில் பங்கு பெற எண்ணம் இல்லாத ரஜினி எப்படி சிறந்த நிர்வாகத்தை தருவார் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.

Comments