மேற்கு வங்க முதல்வர் மம்தா: பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகுவது என்ற தெலுங்கு தேசத்தின் முடிவை வரவேற்கிறேன். இந்த முடிவு நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற உதவும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், ஆரம்பம் முதலே ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் ஆதரித்து வருகிறோம். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் போது அரசின் தோல்வி குறித்து பேச வேண்டும். இது தொடர்பாக பலரிடம் பேசி வருவதாக தெரிவித்தார்.
ஆந்திர மாநில காங்., தலைவர் ரகுவீரா ரெட்டி கூறுகையில், லோக்சபாவில் தெலுங்கு தேசம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கும் எனக்கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி பொது செயலர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், பா.ஜ., அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்க்சிஸ்ட் ஆதரிக்கும். சிறப்பு அந்தஸ்து என்ற உறுதிமொழியை நிறைவேற்றாமல் ஏமாற்றியது மன்னிக்க முடியாதது என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தியாகி கூறுகையில், பெரிய கூட்டணியில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை என்றார்.
பா.ஜ.,வின் நரசிம்மராவ் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சிக்கு 2019ல் தோல்வி கிடைக்கும். அரசுக்கு எதிராகவும் தெலுங்கு தேச கட்சிக்கு எதிராகவும் மக்கள் கோபமடைந்துள்ளனர் என்றார்.
Comments