
கன்னியாக்குமரி : தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் இருந்தும், அரசியலில் இருந்தும் தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், இனி நான் எந்த அரசியலிலும் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம். அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும், திராவிடத்தையும் தவிர்த்து விட்டு கட்சி நடத்தி விடலாம் என நினைக்கிறார் தினகரன். அண்ணாவையும், திராவிடத்தையும் தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. தினகரனின் அநியாயத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார்.
Comments