கொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கலைஞர் - வைரல் வீடியோவால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி (வீடியோ இணைப்பு)

மு.க. கையெழுத்து சென்னை: வீட்டுக்குள்ளேயே கொள்ளுபேரனுடன் கலைஞர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருவதால் அவரது உடன்பிறப்புகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கலைஞர்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் வெளியே வருவதில்லை, பொது நிகழ்ச்சிகளிலும் கட்சி பணிகளிலும் நேரடியாக பங்கேற்பதில்லை. அவருக்கு பிடித்த முரசொலி பவள விழாவில் கூட அவர் பங்கேற்கவில்லை. ஆனால் சமீபகாலமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வாசல் வரை வந்தார் கலைஞர் கடந்த ஆண்டு கோபாலபுரத்தில் உள்ள வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது அவரை வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்தார் கலைஞர்.

அண்ணா அறிவாலயம் அப்போது வெளியே திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். மேலும் ஒரு நாள் இரவு திடீரென அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

மு.க. கையெழுத்து அங்குள்ள வருகை பதிவேட்டில் "மு.க." என்று கலைஞர் கையெழுத்திட்டார். இந்த முன்னேற்றங்களை பார்த்த அவரது உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பந்து வீசிய கலைஞர் இந்நிலையில் பேரன் அருள்நிதியின் மகன் மகிழனுடன் கலைஞர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. அவர் பந்து வீசுவதும் பேரன் பேட்டால் அடிப்பதும் இடம்பெற்றுள்ளன. இது தொண்டர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Comments