கே.சி.பழனிசாமி நீக்கம்: அமைச்சர் விளக்கம்

சென்னை : சென்னை சாந்தோமில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி விவகாரங்கள் குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். கொள்கை முடிவுகளை தனிநபர் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகளை மீறியதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான விவகாரத்தில் கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். கே.சி.பழனிசாமி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்றார்.

Comments