மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு

 Jagan Mohan Reddy, Chandrababu Naidu, Non confidence resolution, நம்பிக்கையில்லா தீர்மானம், ஜெகன் மோகன் ரெட்டி,சந்திரபாபு நாயுடு ,ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, பிரதமர் மோடி,  ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் , தெலுங்கு தேசம், பார்லிமென்ட், Andhra Pradesh Special status, Prime Minister Modi, YSR Congress, Telugu Desam, Parliament,புதுடில்லி: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக பார்லி.யில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் ஓய்.எஸ்.ஆர்.காங். கட்சிக்கு, தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தர முன்வந்துள்ளது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக ஏற்பட்டபிரச்னையால், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை தரவலியுறுத்தி, தெலுங்கு தேசம், எம்.பி.,க்கள் பார்லிமென்டில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆந்திராவில் பிரதான எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர்.காங். கட்சி எம்.பி.க்கள் லோக்சபா செயலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாகவும், இதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவு கோரவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஓய்.எஸ்.ஆர்.கட்சியின் இந்த முயற்சிக்கு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு தர முடிவு செய்துள்ளதாகவும்,இதற்காக கட்சியின் பொலிட்பீரோவில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மாநிலத்தில் எதிரெதிராக அரசியல் செய்து வந்த இருவரும் இப்போது மோடி அரசுக்கு நெருக்கடி தர கை கோர்க்கின்றனர்.

Comments