காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி சரண்யா வாக்குமூலம் பெற்றுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் தீயில் சிக்கிய 10 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால், மீட்புப் பணிகளை கண்காணிக்க 5 ஐஏஎஸ் அதிகாரிகள் தேனி விரைந்துள்ளனர்.
Comments