50,000 விவசாயிகள் பேரணி: ஸதம்பித்தது மும்பை

மும்பை, விவசாயிகள், பேரணி, மகாராஷ்டிரா சட்டசபைமும்பை: மகாராஷ்டிராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகின்றனர்.

இவர்கள் கடந்த 5 நாட்களாக 180 கி.மீ., நடைபயணமாக வந்து, மும்பையை அடைந்துள்ளனர். இன்று (மார்ச் 12) காலை 7 மணிக்கு மும்பை நகரில் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

விவசாயகளின் மின்கட்டணம், விவசாய கடன் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், இந்த பேரணியில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்கிழமையன்று பேரணியை துவங்கிய இவர்கள், இன்று பிற்பகலில் மகாராஷ்டிர சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

Comments