
தேனி: குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி அனுவித்யா உட்பட 5 பேர் பலத்த தீக்காயத்துடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த மாணவி அனுவித்யா,மேலும் மாணவிகள் இலக்கியா, சுவேதா மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சபீதா,கண்ணன் ஆகியோரும் பலத்த தீக்காயங்களுடன் தேனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
7 பேர் பத்திரமாக மீட்பு
சென்னையை சேர்ந்த மோனிஷா, பூஜா சகானா, மற்றும் திருப்பூரை சேர்ந்த ராஜசேகர்,பாவனா, சாதனா ஈரோட்டை சேர்ந்த நேகா ஆகியோர் பத்திரமாக மீ்ட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோலி மூலம் மீ்ட்பு
தீ விபத்தில் காயமடைந்தவர்களை டோலி மூலம் மீட்கப்பட்டு மலையின் கீழ் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
Comments