இந்திய பெருங்கடல், தென் மேற்கு வங்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடல் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள குறைந்த அழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அங்கேயே நீடித்த வருகிறது. அது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு பகுதி வழியாக நகர்ந்து, அரபிக்கடலின் தென் கிழக்கு பகுதியில் புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, தென் தமிழக பகுதியில், இன்று (மார்ச் 12) சில இடங்களிலும், 13 மற்றும் 14ம் தேதிகளில், தென் தமிழகம் மற்றும் தென் கேரளாவின் பல இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் லட்சத்தீவு பகுதியில் மிக கன மழை பெய்யும். அடுத்த 48 மணி நேரத்தில் குமரி கடல் மற்றும் தென் தமிழக பகுதியில் மணிக்கு 40 0 50 கி.மீ., வேகத்தில் காற்று வீச கூடும்.
தென் தமிழகம் மற்றும் தென் கேரள பகுதிகளில் உள்ள மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments