ரூ.2,000 நோட்டு வாபஸ் கிடையாது: மத்திய அரசு விளக்கம்

Pon Radha, demonetization,Rs 2000 Withdrawal, ரூ.2000 வாபஸ், மத்திய அரசு விளக்கம், லோக்சபா, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,புதிய 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு, பொன்.ராதா, செல்லாத ரூபாய் நோட்டு, 
Rs 2,000 withdrawal, federal government explanation, lok sabha, minister pon radhakrishnan, new 10 rupees plastic note, புதுடில்லி: 'தற்போது புழக்கத்தில் இருக்கும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த, 2016 நவம்பரில், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த 2,000 ரூபாய் நோட்டு தொடருமா என்ற கேள்விக்கு, லோக்சபாவில், மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், 'தற்போது புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், 'புதிதாக, 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், ஷிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படும்' என்று, பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Comments