நேபாள விமான விபத்தில் 20 பேர் பலி

நேபாளம் விபத்து, விமானம் விபத்து,  தீ விபத்து,வங்கதேசம், பயணிகள் விமானம் ,  மீட்பு படை, நேபாளம் விமானம் விபத்து, 
Nepal accident, plane crash, fire accident, bangladesh, passenger plane, rescue force, Nepal plane crash,காத்மாண்டு: நேபாளத்தில் விமானம் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீ பிடித்ததால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமுற்றிருக்கலாம் என்றும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

வங்கதேசத்தில் இருந்து வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. பயணிகள் நிலைமை குறித்து உறுதியான தகவலும் இல்லை. விமான நிலையத்தில் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் 67 பேர் இருந்ததாகவும், 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.

விபத்தையொட்டி காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் இங்கு வரும் விமானங்கள் திருப்பி அனுப்பி வரப்பட்டு வருகிறது.

Comments