ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தார் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. தொடர்ந்து, பா.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகியது. பா.ஜ., காங் அல்லாத புதிய கூட்டணியில் சேர வர மாயாவதி, முலாயம் சிங் ஆகியோருக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டணியிலிருந்து விலகியது தொடர்பாக தெலுங்கு தேச எம்.பி,க்கள் ரமேஷ் மற்றும் தோடா நரசிம்மன் டில்லியில் அளித்த பேட்டி: பிஜேபி என்றால் 'பிரகே் ஜனதா பிராமிஸ்' வரும் திங்கட்கிழமை லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.
ஒய்.எஸ்.ஆர்., காங் கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியை தொடர்ந்து அதிமுக.,வும் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியும் கூறி உள்ளார்.
Comments