பாலியல்தென் மாநிலத்தைச் சேர்ந்த கவர்னர் ஒருவர், பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்ததாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், அசோக் பிரசாத் கூறுகையில், ''இது குறித்து எங்களுக்குஎதுவும் தெரியாது; அவ்வாறு எந்தப் புகாரும் வந்ததாகத் தெரியவில்லை,'' என்றார்.
இதற்கிடையே, பாலியல் புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், குறிப்பிட்ட கவர்னரின் தற்போதைய பணியின்போது இந்த சம்பவம் நடந்ததா அல்லது முந்தைய ஆட்சியின்போது அல்லது அந்த கவர்னரின் முந்தைய பதவி காலத்தின்போதுநடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாகவும், உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரவு
மேலும், சம்பவம் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக பதவி விலகும்படி, அந்த கவர்னருக்கு உத்தரவிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேகாலயா கவர்னராக இருந்த, வி.சண்முகநாதன் மீது பாலியல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரியில் அவர் பதவி விலக நேரிட்டது.
Comments