
அமெரிக்க குற்றச்சாட்டு கடந்த பிப்ரவரி 2ம் தேதிதான் அமெரிக்கா முதல்முறையாக இந்த செய்தியை வெளியிட்டது. அதன்படி வடகொரியா சிரியா அரசுக்கு கெமிக்கல் குண்டுகள் வழங்கி வருவதாக கூறியது. இதற்காக இதுவரை 12 கப்பல்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
பாராட்டினார் நீண்ட நாட்களாவே சிரியா அரசுக்கும், வடகொரியாவிற்கும் நல்ல நட்பு இருக்கிறது. 2012ல் போர் தொடங்கியதில் இருந்து சிரியா அரசை வடகொரியா அதிபர் பாராட்டி வருகிறார். கிம் ஜாங் உன் இதற்காக பல முறை அல் பஷாரை சென்று நேரில் சந்தித்து இருக்கிறார். பல மக்கள் இறந்த போதும் இவர் நேரடியாக சென்று பாராட்டினார்.
தொடரும் உதவி பாராட்டுவதோடு இல்லாமல் 2012ல் இருந்தே ராணுவ உதவி வழங்கி வருகிறார். இதற்காக ஆயிரக்கணக்கில் வடகொரியா படைவீரர்கள் சிரியாவில் தற்போதும் இருக்கிறார்கள். ஏற்கனவே வடகொரியா சிரியாவிற்கு ராணுவ பயிற்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வீரர்களை பழகி பார்க்க இதற்கு வடகொரியா முக்கிய காரணம் ஒன்றும் சொன்னது. வடகொரியாவின் கடந்த சில வருடங்களாக போர் இல்லாத காரணத்தால் வீரர்கள் பழக வேண்டும் என்பதற்காக இப்படி அனுப்புவதாகா கூறினார். ஆனால் உண்மையில் இந்த சின்ன விஷயம்தான் காரணமாக இருக்க முடியும் என்று யாராலும் நம்ப முடியவில்லை.
எதிர்பார்க்கவில்லை ஆனால் வடகொரியா கெமிக்கல் கூடுகளை அளிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் வடகொரியா கடந்த 2 வருடங்களாக மறைமுகமாக இப்படி பொருட்களை வழங்கி வந்து இருக்கிறது. இந்த விஷயம் அமெரிக்காவிற்கே 20 நாட்களுக்கு முன்புதான் தெரிந்து இருக்கிறது.
3ம் உலகப் போரா தற்போது இது கிட்டத்தட்ட 3ம் உலகப் போர் போல மாறிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே சிரியா பக்கம் ரஷ்யா, ஈராக், வடகொரியா இருக்கிறது. அதேபோல் போராளிகள் பக்கம் சவுதி, துருக்கி ஆகியவை இருக்கிறது. இன்னும் நிறைய சன்னி நாடுகள் போராளிகளுக்கு உதவி வருகிறது. அமெரிக்கா இரண்டிலும் அங்கு ஒரு கால் இங்கு ஒரு கால் என்று பிரச்சனை செய்து வருகிறது. இந்த போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இப்போது வரை தெரியவில்லை.
Comments