தற்போது உடல் வாகனம் மூலம் துபாய் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்று இரவுக்குள் உடல் மும்பை வந்து சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர நடவடிக்கை
துபாயில் மரணமடைந்த பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் சான்றிதழ் வழங்காததால், அவரது உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடலை பெற இந்திய தூதரக அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி உடலை ஒப்படைப்பதற்கான கடிதத்தை துபாய் போலீசார், அவரது உறவினர்கள் மற்றும் இந்தியதூதரக அதிகாரிகளிடம் வழங்கினர். இதனையடுத்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு, தனி விமானம் மூலம் இன்று இரவுக்குள் மும்பை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Comments