இந்நிலையில் சிபிஐ வளையத்திற்கு கார்த்தி சிக்கியது எப்படி என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. 2007 ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி அன்னிய முதலீட்டை பெறுவதற்கு கார்த்தி உதவி உள்ளார். அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி, கார்த்தி சிதம்பரத்தின் சென்னை செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் தலையிட்டு, விதிகளை மீறி இந்த முதலீட்டை பெற்று தந்துள்ளது. இதற்காக செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சமும், கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ.3.5 லட்சமும் லஞ்சமாக தரப்பட்டுள்ளது.
இதனை ஷீனா போரா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளவரும், ஐஎன்எக்ஸ் மீடியா உரிமையாளருமான இந்திராணி முகர்ஜி சிபிஐ.,யிடம் அளித்த வாக்குமூலத்தில் தெளிவுபடுத்தி உள்ளார். இந்திரா முகர்ஜியின் வாக்குமூலத்தில் பல உண்மைகள் சொல்லப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சாமியும் தெரிவித்துள்ளார். இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தற்போது கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments