மோடியை போல் மிமிக்ரி செய்த டிரம்ப்

Trump Mimicry,Harley Davidson Bike,PM Modi, ஹார்லி டேவிட்சன், பிரதமர் மோடி,  அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா,  வெள்ளை மாளிகை,  டிரம்ப் மிமிக்ரி, மோடி,  ஹார்லி டேவிட்சன் பைக்,  Modi, Trump, Harley Davidson, Prime Minister Modi, President Donald Trump, Chancellor Trump, USA, White House, Modi, america, டிரம்ப்,வாஷிங்டன்: ஹார்லி டேவிட்சன் டூவிலருக்கு இந்தியா விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் எனக்கூறி வரும் அதிபர் டிரம்ப், இது தொடர்பாக மோடி தன்னிடம் கூறிய தகவலை, அவரை போன்று பேசிக்காட்டினார்.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இந்த வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனையடுத்து, வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

பலனில்லை

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் கவர்னர்கள் மத்தியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: சிறந்த மனிதர் என நான் நினைக்கும் பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன் என்னை அழைத்து, வரியை 50 சதவீதமாக குறைத்து விட்டதாக தெரிவித்தார். அதற்கு நான் சரி என பதிலளித்தேன். ஆனால், அமெரிக்காவிற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றார்.

மேலும், அவர் பிரதமர் மோடி போன்று பேசிக்காட்டினார். அப்போது டிரம்ப், மோடியின் குரலில், அவர் அழகான மனிதர். இந்த தகவலை அழகாக சொன்னார். டூவிலருக்கான வரியை 75 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. இது மேலும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை உங்களிடம் கூறி கொள்கிறேன். எனக்கூறினார்.

Comments