இவர்களில் மொராஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், மன்மோகன் சிங் ஆகிய 4 பேரும் நிதியமைச்சர்களாக இருந்து பின்பு பிரதமராகி உள்ளனர். மத்திய நிதியமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன், பிரணாப் முகர்ஜி ஆகிய 2 பேரும் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளனர். இதுவரை நிதியமைச்சராக இருந்தவர்களில் இந்திரா (1970), ஹேவதி நந்தன் பகுகுணா (1979 ஜூலை - 1980 ஜனவரி) ஆகிய 2 பேர் மட்டுமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது இல்லை.
இதுவரை நேரு, இந்திரா, ராஜீவ் ஆகிய 3 பேர் மட்டுமே பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சர் ஆகிய இரு பொறுப்புக்களையும் ஒரே நேரத்தில் வகித்துள்ளனர்.
ஜெட்லியின் பட்ஜெட் :
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்ய உள்ள அவரது 5 வது பட்ஜெட் ஆகும். இது அவரது கடைசி முழு பட்ஜெட் என்பதால் பட்ஜெட் உரை மிக நீண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன் நீண்ட நேர பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய ஜெட்லி 2 மணிநேரம் 10 நிமிடங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சாதனையை அவரே இன்று மீண்டும் முறியடிப்பார் என கூறப்படுகிறது.
Comments