மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம் போல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் கோவிலின் அம்மன் சன்னதியில் உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து சம்பவம் குறித்து பேட்டியளி்தத மாவட்ட கலெக்டர் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கூறி இருந்தார். இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.மேலும் தீ விபத்து நிகழ்ந்த வாசலை தவிர்த்து பிற வாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Comments