நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % முதல் 7.5% ஆக இருக்கும்- ஜேட்லி

India's Economical growth will be 7.2% to 7.5 %
டெல்லி: ஜிஎஸ்டிக்கு பிறகு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி , நாட்டின் பொருளதார வளர்ச்சி 7.2 சதவீதம் முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார். 2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.

அப்போது அவர் கூறுகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % முதல் 7.5% ஆக இருக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் 1.5 லட்சம் புதிய மருத்துவ நல மையங்கள் அமைக்கப்படும். 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கவதற்காக ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றார் அவர்.

Comments