உலகப் பொருளாதாரத்தில் 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேற்றம்- அருண் ஜேட்லி

Arun Jaitley presented the Budget 2018-19 and speak about India's development மத்திய பட்ஜெட் 2018-2019 டெல்லி: வேகமாக வளரும் நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளோம் என்றும் ,நாங்கள் பொறுப்பேற்றபோது இந்தியா ஊழலில் திளைத்திருந்தது என்றும் உலகப் பொருளாதாரத்தில் 7-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார். 2018-19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆற்றிய உரையில் வேகமாக வளரும் நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளோம். உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா எட்டும்.

நாங்கள் பதவியேற்றபோது நாடு ஊழலில் இருந்தது. கடந்த 2017-2018-ஆம் ஆண்டு ஏற்றுமதி 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. 7.5% என்ற பொருளாதார வளர்ச்சியை தொடர்நது 3 ஆண்டுகளாக பராமரித்து வந்தோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் என பாஜக வாக்குறுதி அளித்தது. நிர்வாக சீர்திருத்தத்தால் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான அரசு என வாக்குறுதி அளித்தோம்.

கொள்கை முடக்கத்தால் கடந்த ஆண்டு சிக்கி தவித்தோம். கூடுதல் மூலதனத்தால் வங்கிகளில் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து கல்வி தரத்தை உயர்த்த மத்திய அரசு பாடுப்பட்டுள்ளது. நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இது அமையும் என்றார் அவர்.

Comments