பட்ஜெட் 2018: தூய்மை இந்தியா திட்டம் மூலமாக மேலும் 2 கோடி புதிய கழிவறைகள்!

2 Crore Toilet will be constructed டெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி கழிவறைகள் கட்டப்பட்டும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுகாதார சீர்கேட்டிற்கு பல மாநிலங்களில் கழிவறைகள் இல்லாததே காரணம் என்ற ஆய்வில் வெளியான தகவல் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக தூய்மை இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. துாய்மை பாரதம் திட்டத்தின் மூலம் கிராமங்களின் தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில், கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை கட்டிக் கொள்ள அரசு முழு மான்யத்துடன் வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக பட்ஜெட் தாக்கலின் போது பேசிய ஜேட்லி, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் அமோக வரவேற்பை மக்கள் அளித்ததாக தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்குள் 2 கோடி கழிவறைகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை பல கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், விரைவில் கழிவறைகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இதேபோல நடப்பாண்டில் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்றும், அதற்கான பயனாளிகள் தேர்வு விரைவில் தொடங்கும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Comments