விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு... ஜேட்லி அறிவிப்பு!

FM Arun Jaitley increased the institutional credit to farmers டெல்லி : 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கான கடன் இலக்கு ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். லோக்சபாவில் பட்ஜெட் உரையை வாசித்து வரும் அருண்ஜேட்லியின் இதுவரையிலான அறிவிப்புகளில் விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்படுவது போல மீனவர்கள், கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படும் என்றார். வேளாண்மை வருவாயை பெருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக ஜேட்லி கூறினார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும். விவசாயிகள் நீர்பாசனத்திற்காக சோலார் பம்புகளை அமைத்து வருகின்றன, எனவே மாநில அரசுகள் இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அதற்கான திட்ட வடிவங்களை அமைத்துள்ளது. நீர்பாசனத்திற்கு தேவையான நிதியை நபார்டு மூலம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறைக்கான கடன் இலக்கை அதிகரித்து வருகிறது. 2014 -15ம் ஆண்டில் விவசாய கடன் இலக்கு ரூ. 8.5லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது, 2017-18ம் நிதியாண்டில் ரூ. 10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிதியானது 2018-19ம் நிதியாண்டில் விவசாய கடன் இலக்கானது ரூ. 11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Comments