இது தொடர்பாக, தொ.மு.ச., சங்கத்தின் சண்முகம் கூறியதாவது: ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துஇதுவரையில் வழங்காமல் இருந்ததால், கோர்ட் கடுமையாக கண்டித்ததின் பேரில் ரூ.1,700 கோடி வழங்க வேண்டிய நிலையில், ரூ.750 கோடி மட்டும் வழங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கிவிட்டு பணியில் இருப்பவர்களுக்கு வழங்காமல் இருப்பது முதல்வரின் அறியாமையை காட்டுகிறது. இதனால், தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சவுந்திரராஜன் கூறியதாவது: தொழிலாளர்களின் சம்பள உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறத. சம்பள மாற்று காரணி குறித்து எதுவும் கூறாமல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்து இருப்பது ஏமாற்று வேலையாகும். இதனை ஏற்க இயலாது. எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments